உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS-COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுடன் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இடைக்கிடையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் – கருணா

wpengine

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

wpengine

எதிர்வரும் 1௦ ஆண்டுகளுக்கு ஐ.தே.கட்சியே நாட்டை ஆளும் – தயா

wpengine