வாழ்க்கை

முகப் பொலிவுக்கு பாலை இப்படி பயன்படுத்துங்கள்…

முகத்திற்கு பாலை பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

பால் மற்றும் ரோஸ் வாட்டர்:
பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.

ஓட்ஸ் மற்றும் பால் :
உடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது. அதற்கு ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் தேய்த்து, பிறகு கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

பால் மற்றும் தேன் :
பாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும் முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து தடவினால் நல்லது.

பால் மற்றும் பப்பாளி :
பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.

கேரட் மற்றும் பால் :
கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால், இவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.

Related posts

என்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்…

wpengine

உங்களுக்கு என்ன நோய்? இந்த பழங்களை சாப்பிடுங்கள்

wpengine

கண் இமை அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?

wpengine