உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘மெத்சிறி செவன’ இன்று(20) மக்களிடம் கையளிப்பு…

(FASTNEWS|COLOMBO) ´மெத்சிறி செவன´ சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(20) திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த ஆராய்ச்சி நிலையம் 437 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி சிறுநீரக நோயாளிகளின் நலன்பேணல்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்குரிய ஆராய்ச்சிகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Related posts

அமைச்சரவை மாற்றம் இன்று(23) மாலை – பிரபல மாற்றங்கள் பல…

wpengine

உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிப்பு..!

wpengine

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒன்லைன்ஆலோசனை கோரல்

wpengine