கேளிக்கை

படம் வெளியீட்டை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய புதிய கீதம்…

(FASTGOSSIP|COLOMBO) “Avengers Endgame” படத்தின் வெளியீடை முன்னிட்டு இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கியிருக்கிறார்.

இந்த பாடல் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகிறது.

உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் எதிர்வரும் ஏப்ரல் 26-ஆம் திகதி உலகமெங்கும் வெளியாக வுள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமமை உருவாக்குகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார்.

” என் குடும்பம் மற்றும் என்னை சுற்றியே பல மார்வெல் ரசிகர்கள் இருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது” என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Related posts

பிரபல மொடல் கிம் அமெரிக்க சிறையில்…

wpengine

அமீர்கானுக்கு கொரோனா பரிசோதனை

wpengine

நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க சென்ற பிரபல நடிகர் மருத்துவமனையில்…

wpengine