உள்நாட்டு செய்திகள்

யாழ் நோக்கிப் பயணித்த பஸ் நிட்டம்புவையில் மற்றுமொரு பஸ்ஸுடன் மோதியதில் 21 பேர் காயம்

நிட்டம்புவ ரதாவடுன்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 7.15 அளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 17 பேர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் குருநாகலில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.

இரண்டு பஸ்களிலும் இருந்த பயணிகள் விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஊவா மாகாண முதலமைச்சர் பொலிசில் சரண்…

wpengine

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine

தலவில தேவாலய திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை…

wpengine