உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலை திணைக்களத்திற்கு புதிதாக 1275 இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்..

(FASTNEWS | COLOMBO) – சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரிகள், சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 1275 பேரினை புதிதாக இணைத்துக் கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் கீழ், ஆண் காவலர்கள் 1068, பெண் காவலர்கள் 110, இரண்டாம்-வரிசை ஆண் சிறைச்சாலைக் காவலர்கள் 69, இரண்டாம்-வரிசை பெண் சிறைச்சாலைக் காவலர்கள் 10, இரண்டாம்-வரிசை ஆண் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 15 மற்றும் இரண்டாம்-வரிசை பெண் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 03 ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பிலான விண்ணப்பங்கள் இம்மாதம் 29ம் திகதி (நாளை) அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவுள்ளதோடு, விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உச்ச பாதுகாப்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்

wpengine

Update – புகையிரத விபத்தில் 32 பேர் காயம்…

wpengine

அஸ்ட்ராசெனெகா :  இன்று தீர்மானம்

wpengine