உள்நாட்டு செய்திகள்

இன்றும் கடும் வெப்பமான வானிலை…

(FASTNEWS|COLOMBO) சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று (07) நல்லுருவ, பெல்லப்பிட்டிய, போத்தலே, கஹவத்தை, கதுருகல்ல, கொங்கெட்டிய, ஹபெஸ்ஸ மற்றும் தொம்பகஹவெல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

wpengine

25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகம்…

wpengine

ஓய்வை அடுத்து 166 ஓட்டங்கள் விளாசிய சங்கக்கார அதிரடி வீடியோ

wpengine