கேளிக்கை

கமல் ஹாஸனின் மகளுக்கு தாய் வேடத்தில் நயன்தாரா..

(FASTGOSSIP | COLOMBO) – ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு, இன்று(10) தொடங்கிய நிலையில், இத்திரைப்படம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

‘பாபநாசம்’ திரைப்படத்தில், கமல் ஹாஸனின் மகளாக நடித்த நிவேதா தோமஸ், முருகதாஸின் திரைப்படத்தில், ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், 34 வயதாகும் நயன்தாரா, 23 வயது நிவேதாவுக்கு அம்மாவாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்துவந்த நயன்தாரா, தனது கொள்கையைத் தளர்த்தி, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், தன்னை விட 11 வயதே சிறியவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணம் என்னவென்று, திரையுலகத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

26 வருடத்துக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-மம்மூட்டி…

wpengine

விவாகரத்து பெற்ற விஜய்க்கு 2-வது திருமணம்…

wpengine

பிக்பாஸ் தொடர்பில் நகுலின் நிலைப்பாடு [VIDEO]

wpengine