உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை…

(FASTNEWS|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

ஜாதிக ஹெல உறுமய பௌத்த மதத்தை சீரழித்து விட்டனர் – துறவிகளின் குரல்

wpengine

ரங்கன ஹேரத்தின் மற்றுமொரு உலக சாதனை

wpengine

நாளை(01) முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கு புதிய தரநிலைகள் அறிமுகம்..

wpengine