கேளிக்கை

திட்டமிட்டபடி ஜனவரியில் திருமணம் – இந்த ஆண்டில் அம்மா ஆகிறார் எமி…

(FASTGOSSIP |COLOMBO) அடுத்த வருடம் புத்தாண்டு தினத்திலேயே தனது காதலர் ஜார்ஜை மணப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார் எமி ஜாக்சன். சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் எமியே அறிவித்திருந்தார். குழந்தையை பெற்றுக்கொள்வது பெருமையான விஷயம். அதனால் அதை மறைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

குழந்தை இந்த ஆண்டு இறுதியில் பிறக்கும் எனவும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரியில் தான் திருமணம் என்றும் உறுதி செய்துள்ளார்.

எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related posts

30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்தார் கேத்ரின் தெரசா…

wpengine

பிரபல ராக் பாடகர் Tom Petty மறைவு…

wpengine

மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை தொடர்ந்தும் பின்டைவில்…..

wpengine