உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அனர்த்தம் காணப்படும் மலையக பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கோரிக்கை..

(FASTNEWS| COLOMBO) – தென் மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் ஏற்படக் கூடிய அனர்த்த நிலைக்கு மத்தியில் ஆக கூடுதலான தாக்கம் நாட்டின் மத்திய மலைப்பிரதேசத்தில் மேற்கு சாரலிலும் இலங்கையின் தென் மேற்கு பிரதேசத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன கருத்து தெரிவிக்கையில்; மண்சரிவு அனர்த்தம் அடையாளம் காணப்பட்டுள்ள மலைச்சாரல் பிரதேதசங்களில் வாழும் மக்கள் கூடுதலான அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பில், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பிரதேச நிவாரண சேவைப் பிரிவுகளுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மத்திய நிலையங்களுக்காக சமைத்த உணவு தேவையான சேவைகளை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மில்லயன் ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்படகூடிய நிலைமை தொடர்பில் சுகாதார சேவை 24 மணித்தியாலமும் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் வைத்திய சேவை மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அலிவிஸ் தெரிவித்தார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய எதிர்வரும் சில தினங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். ஏதேனும் அவசர நிலைகளின் போது 117 என்ற தொலைபேசியின் ஊடாக அது தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர பிரிவுக்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

-அரச தகவல் திணைக்களம்-

Related posts

மழையுடனான காலநிலை குறைவடைய கூடும்…

wpengine

கொழும்பில் நாளை 12 மணி நேரம் நீர் வெட்டு

Azeem Kilabdeen

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

wpengine