உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வாள்கள், கூரிய கத்திகள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு…

(FASTNEWS|COLOMBO) சட்டவிரோத வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்காக கடந்த சனிக்கிழமை முதல் இரண்டு நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று(06) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்

wpengine

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை

wpengine