உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டும் பணியில் – ஊடகங்களுக்கு தடை

கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலமானது இன்று தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியிலிருந்து தோண்டப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிமன்ற கட்டளைக்கமைய வைத்திய அதிகாரிகள்,பொலிசினர் மற்றும் தெஹிவளை கிராம சேவகர் ஆகியோர் குறித்த இடத்திற்கு சமூகமளித்துள்ளனர்.

வஸீமினது உறவினர்களின் விசேட வேண்டுகோளுக்கிணங்க ஊடகவியலாளர்களுக்கு புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சடலமானது தோண்டியெடுத்ததன் பின்னர் நீதிமன்ற வைத்திய அதிகாரியால் ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

இன்னும் அதி கூடிய பாதுகாப்புடன் குறித்த சடலமானது தோண்டியெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

Update – வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டது.

wpengine

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை

News Editor

எனக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு இல்லை..!

wpengine