உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

(FASTNEWS|COLOMBO) – அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான குறித்த இந்த கால எல்லை இம்மாதம் 20ம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் தகவல்களை வழங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது

wpengine

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

wpengine

சமூக வலைத்தளங்களில் புகழப்படும் சங்கக்கார

wpengine