உலக செய்திகள்

வெளிநாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு இடைநிறுத்தம்..

(FASTNEWS | COLOMBO) – வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்கள் மீது 25% வரிவிதிப்பு என்ற முடிவை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு சீனா, இந்தியா, ஜப்பான், கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏராளமாக இறக்குமதி வரிவிதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கலிபோர்னியாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – பலர் காயம்…

wpengine

மஹிந்தவுக்கு பாகிஸ்தான் வருமாறு இம்ரான் வேண்டுகோள்

wpengine

22 ஆண்டுகள் பதவியில் இருந்த காம்பியா அதிபர் நாட்டை விட்டு வெளியேற்றம்…

wpengine