உள்நாட்டு செய்திகள்

சுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

(FASTNEWS|COLOMBO) – சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து இன்று(05) காலை வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

wpengine

தேசிய கண் வைத்திய சாலை: நாளை முதல் சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

News Editor

பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine