உள்நாட்டு செய்திகள்

தேர்தலின் மேலதிகப் பாதுகாப்புக்கு இராணுவ உதவி வழங்கத்தயார் – இராணுவ ஊ.பேச்சாளர்

தேர்தல் காலப்பகுதியில் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பற்காக  காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க இராணுவப் படை குழுக்கள் எந்நேரத்திலும் ஆயத்தமாக இருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் ஆயத்தமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஏனைய தேர்தல்களை போன்று இம்முறை தேர்தலிலும் அவசியம் ஏற்பட்டால் இராணுவ ஆதரவு பெற்று கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இராணுவ பிரதானியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

(riz)

Related posts

ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு

wpengine

இன்றைய(01) போட்டி மற்றும் உலகக் கிண்ண பயணம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்ந்தும் ஆர்.சம்பந்தனுக்கு…

wpengine