உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

(FASTNEWS|COLOMBO) – முல்லைத்தீவு, கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை கடற்படையினர் நேற்று(15) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் 510 அடி நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை முல்லைத்தீவு மீன்வள உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

News Editor

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம்…

wpengine

உரம் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் – இலங்கை உரக் கூட்டுத்தாபனம்…

wpengine