உலக செய்திகள்

இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்தது பாகிஸ்தான்

(FASTNEWS|COLOMBO) – இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பயணிக்க பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது.

இந்நிலையில், கர்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது.

Related posts

அல் பக்தாதி தற்கொலை; டொனால்ட் ட்ரம்ப் உறுதி

wpengine

சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற ஆஸி அரசு முடிவு..

wpengine

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க அரசு ஆலோசனை…

wpengine