உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்

(FASTNEWS|COLOMBO) – வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் 07ஆம் திகதியிலிருந்து நாட்டின் தென்மேற்குப் பிரதேசகளில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

மேல்,தென்,சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்..

wpengine

நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

wpengine

நிலவும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்…

wpengine