சூடான செய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொண்டார் மஹிந்த: எம்பியாக செயற்படவும் விருப்பம்!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

´நான் பிரதமராக வேண்டும் என்று கண்ட கனவு மறைந்துபோய் விட்டது. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் சிறந்த போட்டி ஒன்றில் தோல்வியடைந்துள்ளோம்´ என்று மஹிந்த ராஜபக்ஷ ஏஎப்பி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

22 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி 11 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி தாங்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் இது ஒரு மாறுபட்ட போட்டி என்றும் அவர் கூறினார்.

Related posts

இறக்குமதியாகும் தேங்காய் எண்ணெய்க்கான வரியில் சர்ச்சை..!

wpengine

இரகசியமாக மூன்று பதவிகளை வகித்த முன்னாள் பிரதமர் – புதிய சர்ச்சை

wpengine

பலஸ்தீன தாக்குதலை நிறுத்த ஹக்கீம் கூறிய ஆலோசனை – ஹக்கீமின் யோசனையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கம்..!

wpengine