ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் இன்று முற்பகல், ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

வேட்பாளராக போட்டியிட எவரும் முட்டி மோதிக் கொள்ள அவசியமில்லை. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். போட்டியிட்டு நான் வெற்றி பெற்று காட்டுகிறேன் குறித்த கூட்டத்தில் தெரிவித்ததகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இவர்களை தவிர அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த அறிவிப்பை ரணில் அறிவித்தவுடன் மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் உடனடியாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இனி சமூக வலைதள விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் – அமெரிக்க விசாவுக்கு புதிய நிபந்தனை…

wpengine

சஜித்தின் பலத்தை கூட்டும் கூட்டமைப்பு

wpengine

பாரிய ஊழலை அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை!

wpengine