விளையாட்டு

தோள்பட்டையில் பலமாக இடித்த விராட் கோலிக்கு கண்டனம் – ஐசிசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் வேண்டுமென்றே இடித்த இந்திய அணி தலைவர் விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த விராட் கோலி பந்து வீசிய பின் ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக தோள்பட்டையில் இடித்துள்ளார்.

இந்நிலையில், ஐசிசி விராட் கோலியை எச்சரித்ததுடன், தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.

‘இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் நிலை குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணியின் மற்றுமோர் வீரர் ஓய்வு குறித்து வாய் திறந்தார்..

wpengine

பிளாட்டினம் பிரிவில் மஹேலவுடன் இணையும் மாலிங்க..

wpengine

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்கவும் வேட்புமனு தாக்கல்

wpengine