உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து 03ம் திகதி தீர்ப்பினை வழங்குவதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று(30) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதனடிப்படையில் குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் எதிர்வரும் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Related posts

ஊழியர்களுக்கு விஷேட போக்குவரத்து சேவைகள்

wpengine

அஜித் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது

wpengine

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொதுஜன முன்னணிக்கும் இடையிலான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இன்று(09)…

wpengine