ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறுபான்மை வாக்குகள்; சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தால் பரபரப்பு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெற முடியும் என சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் மக்கள் சந்திப்பில் வைத்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்தவொரு நாடும்  அபிவிருத்தி அடைவதில்லை தெரிவித்துள்ளார்.

மேலும்  அங்கு கருத்து தெரிவித்த அவர், நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நூற்றுக்கு 74.5 வீதமான வாக்குகள் சிங்கள வாக்குகள் இருக்கிறது, அந்த வாக்குகளில் 65 தொடக்கம் 70 வீதமான வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பதற்கு தீர்மானித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹகீம், றிஷாட் இன்றி வெற்றிபெறமுடியும் என தெரிவித்துள்ளார். இனவாத அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுக்ககூடாது என தெரிவித்தார்.

இவ்வாறான கருத்துகள் தெரிவித்தமைக்கு பல அரசியல் விற்பனர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இவருடைய சுய அரசியல் இலாபம் கருதி இவ்வாறான கருத்துகளை தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

மக்களின் ஜனாதிபதியின் வாழ்க்கை பயணம்!!

wpengine

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஷோன் மாஷ் உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கம்

wpengine

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

wpengine