Top Story 1சூடான செய்திகள்விளையாட்டு

முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது – 20 தொடரில் விளையாடுகிறது.

 

Related posts

ரியோ ஒலிம்பிக்கில் இலங்கைக்கு 3வது இடம்.

wpengine

இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களை இழிவுபடுத்திய நதாஷா நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற நிலையில் நள்ளிரவில் அதிரடியாக கைது!!

wpengine

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இந்திய நடுவர்களின் பிழையான தீர்மானமே – தயாசிறி

wpengine