ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திடீர் அரசியல் மாற்றம்: புதிய கட்சி ஆரம்பிக்கும் சந்திரிக்கா!(கட்சியின் பெயர் உள்ளே)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் சஜித்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இது தொடர்பில் இரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அது சுதந்திர கட்சியின் இறுதி என சந்திரிக்கா தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் புதிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தும் என அரசியல் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

லிங்கன் மற்றும் கெனடியின் வியப்புமிகு மரணமர்மங்கள்

wpengine

ஜனாதிபதியின் தொலைபேசியும் துண்டிப்பு…

wpengine

ராஜிதவின் அறிவிப்பிற்கு பிரபல பாடகரான இராஜ் பதிலடி… (VIDEO)

wpengine