உள்நாட்டு செய்திகள்

எமது ஆட்சியில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் எந்தவித உடன்படிக்கையிலும் கைச்சாத்திட தாம் தயாரில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹரிஸ்பத்துவ பகுதியில் நேற்று(05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“.. எந்த நாடுகளுடனும் இணைந்து சகோதரத்துவத்துடன் இராஜதந்திர செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் எந்நாட்டிற்கும் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்ட இடமளிக்க போவதில்லை.
அன்று அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பல நாடுகளில் இருந்து நிதிகள் பெற்று கொள்ளப்பட்டன. எனினும் அபிவிருத்தி பணிகள் எந்த நாட்டிற்கும் கையளிக்கப்படவில்லை

இதன் காரணமாக நாட்டின் இறைமையை பாதுகாக்க, பாதுகாப்பை காப்பதற்கான கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது..” எனத் தெரிவித்திருந்தார். தெரிவித்துள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி..

wpengine

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்

wpengine