உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து மாகாண ஆளுனர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.புதிய அரசின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிக்க இடமளித்து, இவ்வாறு ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதேவேளை, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

மாகாண சபைத் தேர்தலை, விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்தும் எண்ணம் இல்லை…

wpengine

அடுத்த சில நாட்களுக்கு குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை…

wpengine

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

wpengine