உள்நாட்டு செய்திகள்

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 011 522 6125 அல்லது 011 522 6126 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தங்களது அடையாள அட்டை பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியுமென, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

wpengine

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்…

wpengine

வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..

wpengine