Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில்

(ஃபாஸ்ட் நியூஸ் | நுகேகொட ) – கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(05) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சோதனை உத்தரவிற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலவிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ வீடு நேற்று(04) மாலை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்றிரவு (04) கைது செய்யப்பட்டார்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் 9 MM ரக 127 ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி

wpengine

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

wpengine

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு.

wpengine