உலக செய்திகள்

டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நாட்டின் பல இடங்களில் போராட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | டெல்லி) – டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(05) திடீரென புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இதனை கண்டித்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளது.

நேற்று(05) மாலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமார் 50 இற்கும் மேற்பட்ட தாக்குதல்காரர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக அதிக அளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

UPDATE – துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலி

wpengine

அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை இரத்து செய்தது தலீபான்கள்…

wpengine

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 72 பேர் பலி

wpengine