ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரக்பி வீரர் யோசித ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை!

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவர்கள் இத்தாலிக்கு விமானத்தில் தப்பிச் செல்வதற்கு, முன்னைய அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் ஒருவரே, உதவி புரிந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

வசீம் தாஜுதீன் விபத்தில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி, இதுபற்றிய விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதையடுத்தே, கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தாஜுதீன் குடும்பத்துக்கு நெருக்கமான சட்டவாளர் ஒருவர், இத்தாலிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எங்கு தங்கியுள்ளனர், எங்கு வேலை செய்கின்றனர் என்பன போன்ற தகவல்களைத் திரட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசீம் தாஜுதீன், மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Related posts

ராஜபக்சர்களை வெளுத்து வாங்கிய அமைச்சர்! – அதிர்ந்தது பாராளுமன்றம்!!

wpengine

ஹகீம், கூட்டமைப்புடன் கலந்துரையாடல்

wpengine

சிங்கள நடிகையின் காதல் லீலைகள்

wpengine