உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது தாம், தேர்தல் காலத்தில் ஜனாதிபதி தொடர்பில் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக விமல் வீரவன்ச, மைத்திரிபாலவிடம் மன்னிப்பை கோரியுள்ளார்.

எனினும் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போனவை போனவையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் தாம் எதிரிடை அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த விமல் வீரவன்ச, மேலும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்பது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

(riz)

Related posts

MT New Diamond : கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சேவாக் ஓய்வு?

wpengine

அவுஸ்ரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

wpengine