ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்தவர் கைது

பொகவந்தலாவ – குயினாதோட்டம் கீழ்பிரிவைச் சேர்ந்த 11 வயது பாடசாலை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் 56 வயது நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று (31) பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வேனில் இருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

சந்தேகநபர் மதுபோதையில் வேனில் ஏறி, சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சட்ட வைத்திய அதிகாரியின் மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு சிறுமி நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கைதுசெய்யபட்ட நபர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுமார் 5 இலட்சம் பேரை பலிகொண்டு கொரோனா ஜூன் 21 உடன் முடிவுக்கு

wpengine

மகேஷ் சேனாநாயக்கவிற்கு அமெரிக்காவில் அதி உயர் விருது

wpengine

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 1/2 வயதுக் குழந்தை

wpengine