உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் Online இல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இலத்திரனியல் (Online) மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றுக்கான அனுமதிக்கு இந்த ஆண்டு முதல் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

இதற்காக, ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.

இந்த எண்ணை அடிப்படையாக வைத்தே பரீட்சை முடிவுகள், மத்திய தகவல் மையத்திற்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரு இலட்சத்துக்கும் மேல் மாத வருமானம் பெறுவோர் இன்று முதல் வரிக்கு பதிவு செய்ய வேண்டும்..!

wpengine

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி

wpengine

அதிகரித்த மழை வீழ்ச்சி – இன்றும் மழையுடன் கூடிய காலநிலை வானிலை அவதான நிலையம் அறிவிப்பு..

wpengine