விளையாட்டு

ஹபீஸுக்கு பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் நடுவர்கள் வெளிப்படுத்தினர். அவர் பந்துவீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்துவீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட த​டையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Related posts

விஷ்ணுவின் அவதார சர்ச்சையில் சிக்கிய தோனியின் வழக்கு பிற்போடு

wpengine

இலங்கை அணியானது திசர பெரேராவை ஓரங்கட்டுவது ஏன்…?

wpengine

நியூசிலாந்து பந்து வீச்சாளர்களிடம் இங்கிலாந்து அணி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது…

wpengine