கேளிக்கை

விண்ணைத்தாண்டி வருவாயா – 2 படத்தின் கதை இதுவா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய இயக்குனர் கௌதம் மேனன், சிம்பு சரி சொன்னால் விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாகும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு திரிஷா நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

இப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்து விட்டது.

இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் வருமா என்று கேட்டார்.

இதற்கு கௌதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் நாயகன் கார்த்திக் அடுத்த பத்தாண்டுகளில் என்னென்ன செய்தார் என்பதை தான் இரண்டாம் பாகத்தில் கூற இருப்பதாகவும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் காதல் இந்த படத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

திருட்டு அழகி விமர்சனம்

wpengine

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்…

wpengine

பிக்பாஸ் மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படத்தினால் ரசிகர்கள் கொதிப்பு

wpengine