கேளிக்கை

கொரோனாவால் கடுப்பாகிய கோப்ரா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படக்குழுவினரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் படக்குழுவினரை தாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்பை நிறுத்தும்படி இந்திய அரசு அறிவித்திருப்பதால் இப்படி கூறியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

Related posts

“விஸ்வாசம்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று(23) வெளியாகியது..

wpengine

யோகிபாபு மீது பொலிஸில் முறைப்பாடு – இன்று திடீர் திருமணம்

wpengine

அட்லீ உடன் இணையும் ஷாருக்கான்

wpengine