கேளிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பிரபல நடிகையின் திருமணம் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது திருமண நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாக மலையாள நடிகை உத்தரா உன்னி தெரிவித்துள்ளார்.

வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள்.

மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவரது உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் கொச்சியில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது திருமண நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் பலி…

wpengine

ஒரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா…

wpengine

2015க்கான கவர்ச்சி நடிகை இதோ… (PHOTOS)

wpengine