உலக செய்திகள்

ட்ரம்ப் இனது Twitter பதிவுக்கு சீனா எதிர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – கொவிட் 19 வைரஸ் சீனா வைரஸ் எனும் பெயரில் சுட்டிக்காட்டி அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கையில், சீனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய பிரிவுகளுக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவு வழங்குவதாகவும் அமெரிக்கா முன்பை விட பலமாக உள்ளதாகவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனா வெளியுறவுத் துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், அமெரிக்கா அரசியல் இலாபங்களுக்காக கொவிட் 19 வைரஸ் உடன் சீனாவை தொடர்புபடுத்த முயற்சிப்பதாக கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி டிரம்ப் TPP ஐ இரத்துச் செய்யக் கையொப்பம்..

wpengine

ஜப்பான் வழியாக 2-வது ஏவுகணையை ஏவிய வடகொரியா..

wpengine

கென்யாவில் அரசியல் குழப்ப நிலை காரணமாக உச்ச நீதிமன்றத்துக்கு சீல் வைப்பு…

wpengine