உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை போக்குவரத்து சபை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக அந்தந்த நிறுவனங்களுக்கு தனித்தனியாக பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (4)முதல் ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சேவை அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக மாத்திரம் இடம்பெறவுள்ளது.

அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்களில் பணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்பட்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரிகேடியர்கள் ஐவருக்கும் லெப்டினன் கேர்னல் 25 பேருக்கும் பதவி உயர்வு…

wpengine

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

wpengine

இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]

wpengine