உள்நாட்டு செய்திகள்

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க இன்று முதல் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில், அரச – தனியார் பேருந்துகளிலும் மற்றும் ரயில்களிலும் இன்று(13) முதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் பயணிக்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இதற்கான அனுமதி வழங்கப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைக்கு செல்லும் ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவசியமற்ற வகையில் பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்துதுறை அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

முடிவை மாற்றி அறிக்கையிட முன்வர வேண்டும்

wpengine

அரச செலவீனங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

wpengine

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ஸ்புட்னிக் V

wpengine