Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை இன்று (20) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய நீதியரசர்கள் புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (20) மேற்கொண்டிருந்தனர்.

Related posts

மின் வெட்டை கட்டுப்படுத்த புதிய கோரிக்கை

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கின் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி..

wpengine

தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என கோரிக்கை

wpengine