Coronavirus Outbreakஉலக செய்திகள்

பிரேசிலில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 19,969 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 19,969 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் அங்கு 332,382 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,116 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

wpengine

இணையத்தளங்களுக்கு ஐ.எஸ். தடை

wpengine

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

wpengine