உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மஹிந்தானந்தவின் கருத்து கேள்விக்குரியது : நாமல் Twitter பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2011ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியென்பது அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு போட்டியாகும் அவ்வாறானதொரு போட்டியின் தன்மையினை இவ்வாறான கருத்துக்கள் தாக்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.

மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.சி.சி. மற்றும் விளையாட்டு அமைச்சர் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பதோடு, பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிக்கு விஜயம்…

wpengine

உரமும் இல்லை, பணமும் இல்லை” – நிர்க்கதியான இலங்கை!

News Editor

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

wpengine