கேளிக்கை

வனிதாவின் 4வது திருமணமும் சர்ச்சையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நடிகை வனிதாவை, பீட்டர் பால் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரின் முதல் மனைவி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா பீட்டர் பால் என்பவரை சனிக்கிழமை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பீட்டர் பால் மீது பொலிஸ் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் முறைப்பாடு அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து பெறாமல் அவர் வனிதாவை திருமணம் செய்ததாக முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த முறைப்பாடு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சன்னியுடன் இணைகிறார் ஜெயராம்…

wpengine

நடிகைகளுக்கு மார்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரி இல்லை – தீபிகா…

wpengine

நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு இரட்டை குழந்தை… (Photos)

wpengine