உள்நாட்டு செய்திகள்

அரச செலவீனங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து அரச செலவீனங்களையும் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தற்போது ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரச நிறுவனங்களில் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்திவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

wpengine

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine