Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இன்று(30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால் மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த முறை தபால் மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 25 பேர் குணமடைந்தனர்

wpengine

சேயா விவகாரம் – “கொண்டையா”வினது DNA ஒத்துப் போகவில்லை

wpengine

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கை பயணம்

wpengine