உள்நாட்டு செய்திகள்

கொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரினதும் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மிரிஹானயிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில், முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, கடந்த மாதம் 10ஆம் திகதி மாலை அவர் கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதியதொரு பொருளாதார வலயம் உருவாக்கப்படும் – மலிக் சமரவிக்கிரம

wpengine

கொந்தளிக்கும் மற்றுமோர் பல்கலைக்கழகம்

wpengine

பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1988 அவசர இலக்கத்தினூடாக தகவல் வழங்கவும்…

wpengine